முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, அமைச்சர்களின் வயது மற்றும் இலாகாக்கள் குறித்த விவாதங்கள் தமிழகம் முழுவதும் அனல் பறந்து வரும் நிலையில், பிரபல முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இதுகுறித்து வெளியிட்டுள்ள கருத்து அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் மிகப்பெரிய அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. விருதுநகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரிடம் செய்தியாளர்கள் தவெக-வின் புதிய அமைச்சரவை மற்றும் இலாகா மாற்றம் குறித்துக் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அவர், “அரசியலில் சும்மா யாருக்கும் ஒரு பதவியைக் கொடுத்துவிட மாட்டார்கள்; ஏதாவது ஒரு வலுவான காரணத்தோடுதான் அந்தந்த துறைகளை ஒதுக்கியிருப்பார்கள்” என்று மிகவும் எதார்த்தமாகப் பேசினார். மேலும், “நீங்க எல்லாரும் ஆவலா காத்துட்டு இருக்கிற மாதிரி, நானும் உங்களைப் போலவே முதலமைச்சர் விஜய் தலைமையிலான இந்த புதிய அமைச்சரவையின் அடுத்த 5 ஆண்டுகள் ஆட்சி எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பார்க்க ரொம்பவே ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் காத்துட்டு இருக்கேன்” எனத் தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த சுவாரசியமான பேட்டி இப்போ சோசியல் மீடியாவில் டாப் ட்ரெண்டிங்காக மாறியுள்ளது.
