கனடாவில் இந்தியர்கள் குறித்து சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 18 வயதான டாசன் ஹாக்லே என்ற கனேடிய இளைஞர், தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையின் சாவியைத் தொலைத்துவிட்டு தவித்தபோது, அங்கு வந்த இந்தியர் ஒருவர் தனக்கு உதவியதை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

மேலும் இந்தியர்கள் மிகவும் புத்திசாலிகள் மற்றும் அன்பானவர்கள் என்று பாராட்டிய அவர், கனடாவுக்கு இது போன்ற இந்தியர்கள் இன்னும் அதிகம் தேவை என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் டாசனின் கருத்தை ஆதரித்து, இந்தியர்களின் நேர்மை மற்றும் தொழில்முறை அணுகுமுறையைப் பாராட்டி வருகின்றனர்.

“>

அதேவேளையில், ஒரு ஹோட்டல் உதவியை வைத்து தேசியத்தை இணைக்க வேண்டியதில்லை என்று ஒரு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும், இந்தச் சம்பவம் கனடாவில் இந்தியர்கள் மீது நிலவும் நேர்மறையான பார்வையை வெளிப்படுத்தும் வகையில் பேசுபொருளாக மாறியுள்ளது.