ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சூரஜ் என்ற சிறுவன், தனது பிறந்தநாளைக் கொண்டாடிய விதம் தற்போது சமூக வலைதளங்களில் பலரது மனதை நெகிழ வைத்துள்ளது. ஆடம்பரமான கேஃபேக்கள் அல்லது பெரிய உணவகங்களுக்குப் பதிலாக, ஒரு சிறிய மண் அடுப்பில் தானே சொந்தமாக மேகி சமைத்து, தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட அவனது எளிமையான கொண்டாட்டம் வைரலாகியுள்ளது.
மேலும் தனது உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தைக் கொண்டு நண்பர்களுக்கு விருந்தளித்த இந்தச் சிறுவனின் செயல், மகிழ்ச்சிக்கு விலை உயர்ந்த பொருட்கள் தேவையில்லை, உண்மையான நட்பும் அன்பும் மட்டுமே போதும் என்பதை உலகுக்கு உணர்த்தியுள்ளது.
View this post on Instagram
“>
இந்த வீடியோவை இணையத்தில் பார்த்த பலரும், தங்கள் சிறுவயது நினைவுகளை அசைபோட்டு உணர்ச்சிவசப்பட்டுள்ளனர். 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வீடியோ, இன்றைய காலக்கட்டத்தில் பகட்டான வாழ்க்கை முறைக்கு மத்தியில், உண்மையான மகிழ்ச்சி இவ்வளவு எளிமையான தருணங்களில் தான் ஒளிந்திருக்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
