சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்த நிலையில் இன்று விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 வரையில் உயர்வடைந்து ஒரு சவரன் 1,18,480 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,810 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 16156 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,29,248 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு 5 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு கிராம் 295 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,95,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.