கணவரைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற விபரீத எண்ணத்தில், பெண் ஒருவர் தனது கையில் சுமார் மூன்று ஆண்டுகளாக பிளாஸ்டிக் கவர்களைச் சுற்றிக் கட்டியிருந்த அதிர்ச்சிகரமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் மூடநம்பிக்கையின் உச்சமாகச் செய்யப்பட்ட இந்த செயலால், அந்தப் பெண்ணின் கை கடுமையாகப் பாதிக்கப்பட்டு, விரல்கள் வீங்கி செயலிழந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த அந்தப் பெண்ணின் கையைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், பிளாஸ்டிக் கவர்களால் ஏற்பட்ட தொற்று மற்றும் நரம்பு பாதிப்புகளைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
View this post on Instagram
“>
இந்தச் சம்பவம் கடும் மனநலப் பாதிப்பின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. மூடநம்பிக்கையினால் உடல் உறுப்புகளைச் சிதைத்துக்கொண்ட அந்தப் பெண்ணுக்கு, தற்போது நீண்டகால மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதால் அவர் மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
