ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் ராஜஸ்தான் அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்ஷி, வெறும் 38 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 93 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.
இந்த சிறப்பான ஆட்டத்திற்குப் பிறகு பேசிய வைபவ், போட்டி குறித்து ஒரு முக்கிய ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் பேசுகையில், எங்கள் அணி பந்துவீசிக் கொண்டிருந்தபோதே, பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதை நான் கவனித்தேன். அப்போதே எனது மனதில் ஒரு விஷயத்தை தீர்க்கமாக முடிவு செய்தேன்.
இதனால் லக்னோ அணி நிர்ணயித்த 221 ரன்கள் என்ற பெரிய இலக்கை துரத்தும்போது, ஆரம்பத்திலிருந்தே ஆக்ரோஷமாக விளையாடி ரன்களைக் குவிக்க வேண்டும் என்று எனக்குள் திட்டமிட்டிருந்தேன் என்று கூறினார். இந்த இளம் வீரரின் துணிச்சலான முடிவும், அதிரடி ஆட்டமும் ராஜஸ்தான் அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பைத் தக்கவைக்க பெரிதும் உதவியுள்ளது.
