லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் சிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விக்கெட் வீழ்த்திய பிறகு ஒரு ‘சீட்டு’ காட்டி விசித்திரமான முறையில் கொண்டாடினார். ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் அவரது பந்துவீச்சு முற்றிலும் தோல்வியடைந்தது.
மேலும் ராஜஸ்தான் அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி, ஆகாஷ் சிங்கின் பந்துவீச்சை துவம்சம் செய்து, மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டார். இளம் வீரரின் இந்த மோசமான பந்துவீச்சையும், ரன்களை வாரி வழங்கியதையும் கண்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் புகழ்பெற்ற வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர், நேரடி வர்ணனையின் போது அவரை கடுமையாக சாடினார்.
🎥2️⃣ big wickets for Akash Singh 🔥
And a celebration you don’t want to miss 🗒️👌
Updates ▶️ https://t.co/v1R8RJXPe8#TATAIPL | #KhelBindaas | #LSGvCSK | @LucknowIPL pic.twitter.com/jY76LqHMnb
— IndianPremierLeague (@IPL) May 15, 2026
“>
இந்நிலையில் ஆகாஷ் சிங்கின் முந்தைய கொண்டாட்டத்தை கிண்டல் செய்யும் வகையில், “இப்போது அந்த சீட்டு எங்கே போனது?” என்று கவாஸ்கர் நேரலையில் கேள்வி எழுப்பினார். சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தாமல், தேவையற்ற கொண்டாட்டங்களில் ஈடுபடும் இளம் வீரர்களின் மனப்போக்கை சாடும் வகையிலேயே கவாஸ்கரின் இந்த விமர்சனம் அமைந்திருந்தது.
