கரூர் மாவட்டத்தில் அரங்கேறிய துயரச் சம்பவத்தின் எதிரொலியாக, அங்குப் பாதுகாப்புப் பணியில் தொய்வு ஏற்பட்டதாகக் கூறி, மாவட்ட டிஎஸ்பி மற்றும் காவல் ஆய்வாளர்கள் உட்படப் பல காவலர்களைத் தமிழக அரசு அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக, அந்தச் சம்பவத்தின் போது கரூரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த டிஎஸ்பி செல்வராஜ் மற்றும் ஆய்வாளர் மணிவண்ணன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இந்த அதிரடி ஆக்ஷனில் தூக்கியடிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து, நிர்வாகக் காரணங்களை முன்னிறுத்தி மொத்தம் 10 காவல் ஆய்வாளர்கள் தெற்கு மற்றும் வடக்கு மண்டலங்களுக்கு அதிரடியாக மாற்றப்பட்டு, மாநிலக் காவல் தலைமையகம் மூலம் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தவெக அரசுப் பொறுப்பேற்ற பிறகு சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் எவ்வித சமரசமும் இல்லை என்பதை உணர்த்தும் வகையில், கோட்டை வட்டாரத்திலிருந்து நேரடியாகப் பறந்த இந்த உத்தரவு தற்பொழுது ஒட்டுமொத்த காவல் துறை வட்டாரத்திலும், அரசியல் களத்திலும் பெரும் பரபரப்பை எகிறச் செய்துள்ளது.
