தலைநகர் சென்னையில் இன்று (மே 19) காலையிலேயே ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் அதிரடி ‘ஆபரேஷன்’ நடத்தி வருவது கோட்டை வட்டாரத்திலும் தொழிலதிபர்கள் மத்தியிலும்  சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, அயனாவரம் மற்றும் திருமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள முக்கிய புள்ளிகளை டார்கெட் செய்து இந்த சோதனைகள் அதிகாலையிலேயே தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், பழைய கார்களை வாங்கி விற்கும் (Used Car Business) தொழில் செய்து வரும் ஒரு முக்கிய பைனான்சியரின் இல்லம் மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் தான் இந்த ‘இடி’ (ED) ரெய்டு மிகத் தீவிரமாக அரங்கேறி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செந்தில் பாலாஜி விவகாரத்தில் தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பிய பரபரப்பு அடங்குவதற்குள், சென்னையில் அடுத்தடுத்து நடத்தப்பட்டு வரும் இந்த திடீர் சோதனைகள் அரசியல் மற்றும் தொழில் உலகத்தை அதிர வைத்துள்ளது.