தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான தளபதி விஜய் அவர்கள் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் முதற்கட்டமாகச் சுமார் 717 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் வேகமாக மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடை மூடப்பட்டதை சாதகமாக்கிக் கொண்டு, சிலர் மறைமுகமாகச் சட்டவிரோத கள்ளச்சந்தை மது விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த விஷயம் அந்தப் பகுதி பெண்களுக்குத் தெரியவந்ததை அடுத்து, அவர்கள் ஒட்டுமொத்தமாகத் திரண்டு வந்து சண்டைக்கு நின்றனர்.
இது மக்கள் ஆட்சி மக்களுக்கான ஆட்சி என்று தமிழ் நாடு CM தளபதி விஜய் அவர்கள் ஒன்றும் சும்மா சொல்லவில்லை📈🔥 pic.twitter.com/NI7Ozvcp7W
— SɪᴠᴀɴG VJ 🕶️ (@iam_sivang) May 17, 2026
முதலமைச்சர் விஜய்யின் மதுவிலக்கு முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்த அந்த நபரை, ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் ஒன்றுசேர்ந்து ஓட ஓட விரட்டி அடித்தனர். அதோடு மட்டுமில்லாமல், சட்டவிரோத மது விற்பனை நடந்து வந்த அந்த இடத்தின் மீது சரமாரியாகக் கல்லெறிந்தும் தங்களின் கடுமையான எதிர்ப்பைக் காட்டி அதிரடித் தாக்குதல் நடத்தினர். பெண்களின் இந்த அக்னிப் பிழம்பான ஆக்ரோஷத்தைக் கண்டு கள்ளச்சாராய வியாபாரி அலறியடித்து ஓடியுள்ளார். இது தொடர்பான அதிரடி சிசிடிவி மற்றும் போன் வீடியோ காட்சிகள் தற்போது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் வெளியாகி, ஒட்டுமொத்த தமிழக அரசியல் களம் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பயங்கர வைரலாகி வருகிறது.
