தெலங்கானா மாநிலம் மஹபூப்நகர் மாவட்டத்தில் நடந்துள்ள ஒரு கோர சாலை விபத்தின் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி காண்போரை நெஞ்சம்படபடைக்க வைத்துள்ளது. பிஸியான அந்தச் சாலையில் பெண் ஒருவர் தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது, ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவு எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி திடீரென அமுக்கமாகத் திறக்கப்படுகிறது. எதிர்பாராத விதமாகத் திறக்கப்பட்ட கார் கதவின் மீது அந்தப் பெண் ஓட்டி வந்த ஸ்கூட்டர் கண்ணிமைக்கும் நேரத்தில் பலமாக மோதியுள்ளது.
இதில் நிலைதடுமாறி சாலையில் தூக்கி வீசப்பட்ட அந்தப் பெண், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. காரை விட்டு கீழே இறங்கும்போது பின்னால் வாகனம் வருகிறதா என்று பார்க்காமல் செய்த இந்த அலட்சியம், ஒரு அப்பாவிப் பெண்ணின் உயிரைப் பறித்துள்ளது ஒட்டுமொத்த பொதுமக்களையும் ஆத்திரமடையச் செய்துள்ளது. இந்த விபத்து வீடியோ ‘X’ (ட்விட்டர்) தளத்தில் காட்டுத்தீயாய் பரவி வரும் நிலையில், 80 சதவீத மக்களுக்கு அடிப்படை சாலை விதிகளே தெரிவதில்லை என்று நெட்டிசன்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
సీసీటీవీ ఫుటేజ్..!
కారు డ్రైవర్ నిర్లక్ష్యం.. మహిళ మృతి
మహబూబ్నగర్లో ఓ కారు డ్రైవర్ అకస్మాత్తుగా కారు డోర్ తెరవడంతో.. డోర్ తగిలి స్కూటీ పై వస్తున్న ప్రిస్సిల్లా(45) అనే మహిళ మృతి
తీవ్రంగా గాయాలు కాగా, చికిత్స పొందుతూ మృతిచెందిన మహిళ
జిల్లా కేంద్రంలోని ప్రభుత్వ ఆసుపత్రిలో… pic.twitter.com/BLqx9Qvi7n
— Telugu Scribe (@TeluguScribe) May 18, 2026
காரை நிறுத்தும்போது கண்ணாடிகளைப் (Mirrors) பார்ப்பதோ அல்லது மொபைல் போன் பார்த்துக்கொண்டே அஜாக்கிரதையாகக் கதவைத் திறப்பதோதான் இதுபோன்ற மரண விபத்துகளுக்குக் காரணம் என நெட்டிசன்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த அலட்சிய மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
