திரையுலகில் நடிகர், நடிகைகளின் ஆன்-ஸ்கிரீன் கெமிஸ்ட்ரியை விட, ஆஃப்-ஸ்கிரீனில் அவர்கள் செய்யும் ஒவ்வொரு அசைவையும் நெட்டிசன்கள் பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா இடையே நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடுமையான விவாதங்களை கிளப்பியுள்ளது. ஹோமி அதாஜானியா இயக்கத்தில் ஷாஹித் கபூர், ராஷ்மிகா மந்தனா மற்றும் கீர்த்தி சனோன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘காக்டெய்ல் 2’ திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் இந்த விபரீதம் அரங்கேறியுள்ளது.

​இந்த நிகழ்ச்சியில் ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சனோனின் அழகைப் புகழ்ந்து ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஊடகங்களுக்குப் புகைப்படம் எடுப்பதற்காக ஷாஹித் கபூர், ராஷ்மிகாவின் பின்னால் வந்து அவரது இடுப்பில் கை வைத்துள்ளார். ஷாஹித் கபூர் தொட்ட அடுத்த நொடியே, சற்றும் எதிர்பாராத ராஷ்மிகா பயங்கரமாக அதிர்ச்சியடைந்து அசிங்கமாக ஃபீல் செய்துள்ளார். இதனால் ஒட்டுமொத்த மீடியாக்கள் முன்னிலையிலேயே ஷாஹித் கபூரின் கையை படுவேகமாக தட்டிவிட்டுத் தள்ளியுள்ளார். ராஷ்மிகாவின் இந்த அதிரடி ரியாக்ஷனைப் பார்த்து ஷாஹித் கபூரே சில நொடிகள் அரண்டுபோய் ஸ்தம்பித்து நின்றுவிட்டார். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், “பொது மேடையில் இப்படி அநாகரிகமாகவா தொடுவது?” என்று நெட்டிசன்கள் ஷாஹித் கபூரை வளுவாக வெளுத்து வாங்கி வருகின்றனர். வரும் ஜூன் 19, 2026 அன்று ரிலீஸாகவுள்ள ‘காக்டெய்ல் 2’ படத்தின் எதிர்பார்ப்பை விட, இந்த சர்ச்சையே தற்போது பாலிவுட்டை அதிர வைத்துள்ளது.