தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு கடிதம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 35 சதவீத வாக்குகளைப் பெறும் என்று தான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என அவர் தனது கடிதத்தில் ஓப்பனாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழக அரசியல் களம் தற்போது நிச்சயமாக ஒரு புதிய யுகத்திற்குள் நுழைந்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுவரை தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வந்த திமுக, அதிமுக என்ற இருதுருவ கட்சிகளின் அரசியல் தற்போது முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளதாகக் கூறியுள்ளார். இந்த அதிரடியான தேர்தல் முடிவுகள் மற்றும் முன்னாள் அமைச்சரின் இந்த வெளிப்படையான கடிதம், தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமன்றி, ஒட்டுமொத்த தமிழக அரசியல் வட்டாரத்திலும் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்த பெரும் எதிர்பார்ப்பையும், விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
