தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் தனிச் செயலாளர்களான செந்தில்குமார், லட்சுமி பிரியா, அண்ணாதுரை மற்றும் விஷ்ணு ஆகியோருக்கு முக்கிய அரசுத் துறைகள் முறைப்படி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அரசுத் துறை ரீதியான சந்திப்புகள், புதிய திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து மிகத் துல்லியமாகக் கவனம் செலுத்தும் விதமாக இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் நிர்வாகப் பணிகள் அனைத்தும் இனி தொய்வின்றி, அதிவேகமாக நடக்கும் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

​துறை ஒதுக்கீட்டின்படி, செந்தில்குமாருக்கு நிதித்துறை, மதுவிலக்கு, நகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை மற்றும் விஜிலன்ஸ் உள்ளிட்ட மிக முக்கிய துறைகள் வழங்கப்பட்டுள்ளன. லட்சுமி பிரியாவுக்கு சுற்றுச்சூழல், பள்ளி மற்றும் உயர்கல்வித்துறை, வனத்துறை, வீட்டு வசதித்துறையும், அண்ணாதுரைக்கு இயற்கை வளங்கள், நீர்வளத்துறை, வேளாண்மை, போக்குவரத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், விஷ்ணுவுக்கு வணிக வரித்துறை, சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.