கடந்த சில நாட்களாகவே ஏறி இறங்கி கண்ணாமூச்சி காட்டி வரும் தங்கம் மற்றும் வெள்ளி விலை, இன்று வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமையே இல்லத்தரசிகளுக்கு ஒரு ஸ்வீட் ஷாக்கும், அதேசமயம் ஒரு ‘பகீர்’ அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.

சென்னையில் கடந்த சனிக்கிழமை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு கிராம் ரூ.14,750-க்கும், சவரன் ரூ.1,18,000-க்கும் விற்பனையான நிலையில், நேற்றைய ஞாயிற்றுக்கிழமை விலையில் எந்த மாற்றமும் இல்லை; அதேபோல் இன்றும் தங்கம் விலை எவ்வித மாற்றமுமின்றி அதே ரூ.1,18,000-க்கு விற்பனையாகி நடுத்தரக் குடும்பங்களுக்குப் பெரிய நிம்மதியைத் தந்துள்ளது.

ஆனால், தங்கம் கொடுத்த நிம்மதியை வெள்ளி விலை அப்படியே தட்டிப்பறித்துள்ளது; நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.290-க்கு விற்ற வெள்ளி, இன்று யாரும் எதிர்பாராத விதமாக கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10,000-மும் மளமளவென அதிரடியாக உயர்ந்துள்ளது.

இந்த அதிரடி விலை ஏற்றத்தால் இன்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.300-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.3 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருவதால், வெள்ளிப் பொருட்கள் வாங்கத் திட்டமிட்டிருந்த மக்கள் தங்களின் பாக்கெட்டைப் பார்த்து பெருமூச்சு விட்டு வருகின்றனர்.