தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வாரிக் குவித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு தவெக தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள நிலையில், அவரது அமைச்சரவையின் டாப் கியர் அதிரடி நடவடிக்கைகள் தற்போதே களத்தில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன.
முதலமைச்சருடன் பதவியேற்ற 9 அமைச்சர்களுக்கு நேற்று முன்தினம் இலாகாக்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், மிக முக்கியத்துவமிக்க விளையாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஆதவ் அர்ஜுனா, பதவி ஏற்ற கையோடு சற்றும் தாமதிக்காமல் இன்று காலை (மே 17) சென்னை நேரு மைதானத்தில் இறங்கி ‘மின்னல் வேக’ அதிரடி ஆய்வை மேற்கொண்டார்.
ஸ்டேடியத்தின் தற்போதைய உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அங்குள்ள சூழ்நிலைகள் குறித்து அதிகாரிகளுடன் தீவிரமாக ஆலோசனை நடத்திய அமைச்சர், மைதானத்தில் வியர்வை சிந்திப் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த விளையாட்டு வீரர்களிடமும் நேரடியாகச் சென்று கலந்துரையாடி அவர்களின் குறைகளையும், தேவைகளையும் கேட்டறிந்தார்.
தவெக அரசு அமைந்த உடனே விளையாட்டுத்துறையை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், புதிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எடுத்த இந்த உடனடி கிரவுண்ட் ஆக்ஷன், ஒட்டுமொத்த விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய நம்பிக்கையையும், பாராட்டுகளையும் குவித்து வருகிறது.
#WATCH | Tamil Nadu Minister Aadhav Arjuna inspects the Jawaharlal Nehru Stadium in Chennai pic.twitter.com/0qf1NDTebH
— ANI (@ANI) May 18, 2026
“>
