செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில், மாற்றுக்கட்சியினர் தவெக கட்சியில் இணையும் விழா இன்று நடைபெற்று வரும் சூழலில், இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் குவிந்து வருவதால், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

நிகழ்விடத்தை நோக்கித் தொண்டர்களின் வாகனங்கள் அணிவகுத்து வருவதால், நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலையும், பல கிலோமீட்டர் தூரத்திற்கு வரிசையாக வாகனங்கள் சிக்கிக்கொண்டு போக்குவரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரியவருகிறது.

இந்த அரசியல் நிகழ்வால் ஏற்பட்ட திடீர் போக்குவரத்து நெரிசலால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு, போலீசாரும் போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.