ஐபிஎல் 2026 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், ஆர்சிபி அணியின் அதிரடி வீரர் வெங்கடேஷ் ஐயர் தனது அபாரமான ஆட்டத்தால் ரசிகர்களைக் கட்டிப்போட்டார்.

29 பந்துகளில் அரைசதம் கடந்து மிரட்டிய வெங்கடேஷ் ஐயர், அதைத் தொடர்ந்து செய்த கொண்டாட்டம்தான் இப்போது சமூக வலைதளங்களில் செம டிரெண்டாகி வருகிறது.

தான் ஒரு தீவிர விஜய் ரசிகர் என்பதை நிரூபிக்கும் வகையில், ‘மெர்சல்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் (தற்போதைய தமிழக முதல்வர்) செய்யும் அதே ஐகானிக் மேனரிசத்தை மைதானத்தில் செய்து காட்டினார்.

இதைப் பார்த்த அரங்கத்தில் இருந்த தவெக மற்றும் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் கோஷமிட்டுத் தீர்த்தனர். ஆர்சிபி அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய வெங்கடேஷ் ஐயரின் இந்த வீடியோ, “தமிழக முதல்வருக்கு கிரிக்கெட் வீரர் கொடுத்த மாஸ் ட்ரிபியூட்” என இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.