நேபாளத்தில் உள்ள புகழ்பெற்ற தேசிய பூங்காவிற்கு அருகில் உள்ள சௌராஹா என்ற சுற்றுலா நகரத்தின் பொதுச் சாலையில், இரண்டு ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் பயங்கரமாக மோதிக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பூங்காவிலிருந்து தடம் மாறி ஊருக்குள் வந்த வயதான பெரிய காண்டாமிருகம் ஒன்றுடன், தனது எல்லையை நிலைநாட்டுவதற்காக மற்றொரு இளம் காண்டாமிருகம் நடுத்தெருவில் சண்டையிடத் தொடங்கியுள்ளது.
காண்டாமிருகங்கள் இரண்டும் சீறிக்கொண்டு ஓடிக் கடுமையான மோதலில் ஈடுபட்ட இந்தத் திடுக்கிடும் காட்சியைக் கண்டு, அங்கிருந்த கடைக்காரர்கள் பயத்தில் கடைகளை அடைக்கத் தொடங்கினர்.
அதே நேரத்தில் அங்கிருந்த பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் இந்த விசித்திரமான சண்டையை வியப்புடன் பார்த்துத் தங்களது மொபைல் போன்களிலும் படம்பிடித்துள்ளனர். இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த கிருஷ்ண தாஸ் என்பவர், சண்டையின் முடிவில் நடந்த ஒரு சுவாரசியமான விஷயத்தைப் பகிர்ந்துள்ளார்.
சண்டையிட்டு ஓய்ந்த பிறகு, அதில் வென்ற ஒரு காண்டாமிருகம் அங்கிருந்த பூக்களை அமைதியாக ரசித்துச் சாப்பிடத் தொடங்கியுள்ளது. காண்டாமிருகங்களுக்குச் சண்டை இல்லாத நேரங்களில் பூக்களைத் தின்பது மிகவும் பிடிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அரிய காட்சியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த பயனர், “நான் வனவிலங்குகளைப் பார்க்கத் தான் இங்கு வந்தேன், ஆனால் வனவிலங்குகளே சண்டையோடு என்னைத் தேடி வந்துவிட்டன” எனக் கலகலப்பாகப் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
“>
அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில், “ஜெயித்தவனுக்குப் பூக்கள் பரிசாகக் கிடைத்துவிட்டன” என நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவின் கீழ் சுவாரசியமாகக் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
