ஜார்கண்ட் மாநிலம் பொகாரோ அரசு அல்லது தனியார் மருத்துவமனையில் மனிதாபிமானமற்ற, நெஞ்சை உலுக்கும் ஒரு பயங்கர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிறந்து வெறும் 4 நாட்களே ஆன ஒரு பச்சிளம் குழந்தை, சிகிச்சை பலனின்றி இரண்டு மணி நேரத்திற்கு முன்பே இறந்துவிட்ட நிலையிலும், அங்குள்ள மருத்துவர்கள் அதை மறைத்துத் தொடர்ந்து சிகிச்சை அளிப்பது போல நாடகமாடியுள்ளனர். மருத்துவமனையின் பில் தொகையை எகிற வைப்பதற்காகவே, இறந்த குழந்தைக்கு குளுக்கோஸ் மற்றும் மருந்துகளை ஏற்றிப் பணவெறியின் உச்சக்கட்டத்தை அரங்கேற்றியுள்ளனர்.

​குழந்தையைப் பார்க்க அனுமதிக்காததால் சந்தேகமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், அதிரடியாக வார்டுக்குள் நுழைந்து பார்த்தபோதுதான் அந்தப் பகீர் உண்மை அம்பலமானது. குழந்தை ஏற்கனவே இறந்து குளிர்ந்து போயிருந்த நிலையிலும், மருத்துவர் தொடர்ந்து நாடி துடிப்பைப் பார்ப்பது போல் ஏமாற்றியதைக்கண்டு உறவினர்கள் கதறி அழுது அங்கிருந்தவர்களை உலுக்கினர். ‘கப்பார் இஸ் பேக்’ படத்தில் இறந்த பிணத்துக்குச் சிகிச்சை அளித்து லூட் அடிக்கும் காட்சியை நிஜமாகவே அரங்கேற்றிய இந்த மருத்துவர்களின் கொடூர வீடியோ, தற்போது எக்ஸ் (X) தளத்தில் காட்டுத்தீயாகப் பரவி, பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.