டெல்லி ஷாதரா பகுதியில் நள்ளிரவில் தெரு நாய் ஒன்றை நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யும் அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விலங்கு நல ஆர்வலர் ரேணு கவுர் என்பவர் இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த நபர் இதற்கு முன்பும் தனியாக இருக்கும் விலங்குகளைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகவும், பெண்கள் மற்றும் சிறுமிகளைத் தனது வீட்டிற்குச் சந்தேகத்திற்குரிய வகையில் வரவழைத்ததாகவும் ரேணு கவுர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் அந்த நபரைத் பிடித்துத் தாக்கி, வீதிகளில் ஊர்வலமாக இழுத்துச் சென்று போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாகப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அதே நேரத்தில், இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விலங்கு வன்கொடுமை சட்டம் மற்றும் பொதுமக்களே கையில் எடுக்கும் சட்டம் குறித்த கடுமையான விவாதங்களை உருவாக்கியுள்ளது.
மிருகங்களுக்கு எதிரான இதுபோன்ற வன்கொடுமைகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்தும் வேளையில், சட்டத்தை மக்கள் கையில் எடுப்பது தவறானது என்றும், உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை மூலமே தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
