மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் பார்ப்பவர்களை உறைய வைக்கும் வகையிலான ஒரு அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுவன் மீது தெரு நாய்கள் கூட்டம் திடீரென பாய்ந்து கொடூரமான முறையில் தாக்கின. சிறுவனை நாய்கள் கடித்து குதறுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக ஓடிவந்து நாய்களை விரட்டிவிட்டு சிறுவனை மீட்டனர்.
இந்த கோரமான தாக்குதல் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த சிறுவன் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீபகாலமாக அதிகரித்து வரும் தெரு நாய்களின் அட்டகாசத்தால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
बीड : थरकाप उडवणारा व्हिडीओ, 4 वर्षीय चिमुरड्यावर भटके कुत्रे तुटून पडले pic.twitter.com/WT3cOCRXkz
— Sumit Bhujbal (@SumitBhujb19648) May 14, 2026
“>
இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் தெரு நாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
