ரஷ்யாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் வசித்து வருகிறார். அவர் இந்தியப் பெண்களிடம் இருந்து தான் கற்றுக்கொண்ட 5 சுவாரஸ்யமான பழக்கவழக்கங்கள் குறித்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரஷ்யாவில் இருந்தபோது காலை 10 மணிக்கு எழுந்திருக்கும் தான், இந்தியாவில் குப்பை சேகரிப்பவர்கள் மற்றும் பால்காரர்களின் சுறுசுறுப்பைப் பார்த்து இப்போது அதிகாலை 5 மணிக்கே எழுந்துவிடுவதாகக் கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல், தன் கணவர் எழுவதற்கு முன்பே சூடாகச் சமைப்பது, விசேஷங்களுக்குப் பாரம்பர்ய உடை அணிவது மற்றும் விருந்தினர்களை இன்முகத்துடன் வரவேற்று உபசரிப்பது போன்ற பழக்கங்கள் இப்போது தனது வாழ்வின் அங்கமாகிவிட்டதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, எந்த ஒரு முடிவையும் கணவரிடம் கலந்து ஆலோசிப்பது ரஷ்யாவில் சுதந்திரம் இல்லாதது போலத் தோன்றினாலும், இந்தியாவில் அது ஒரு சிறந்த குழுப்பணியாக தனக்குத் தெரிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவை இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். “எங்கள் ஊர் கலாச்சாரத்தை இவ்வளவு அழகாகப் பெருமைப்படுத்தியதற்கு நன்றி” என்று இந்திய நெட்டிசன்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
“>
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியப் பெண்கள் பலரும், தங்களது பாரம்பர்ய உடைகளை அணியும்போது அங்குள்ளவர்கள் தங்களை வியப்பாகப் பார்ப்பது குறித்து இந்த வீடியோவின் கமெண்ட் செக்ஷனில் விவாதித்து வருகின்றனர்.
