தமிழக வெற்றிக் கழகத்தின் ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரமேஷ், தனது பதவியேற்பு விழாவின் போது பேசிய உருக்கமான செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரமேஷ் எம்எல்ஏ-வாகப் பதவியேற்ற அந்தப் பெருமிதமான தருணத்தில் அவரது தாயார் அங்கு வரவில்லை. இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “எனது தாயார் ஒரு சமையல் தொழிலாளி, அவருக்கு இன்று வேலைக்கு விடுப்பு கிடைக்கவில்லை, அதனால்தான் வரவில்லை” என ரமேஷ் மிக எதார்த்தமாகக் கூறியுள்ளார்.
அம்மா இன்னும் சமையல் வேலை பாக்குறாங்களாம் லீவ் கிடைக்காதுனு பதவியேற்புக்கு வரலயாம் 🥺♥️ pic.twitter.com/mpuzWEfNQz
— 🥶. (@KuskiOffcl) May 12, 2026
தன் மகன் ஒரு தொகுதிக்கு எம்எல்ஏ-வாகப் பதவியேற்கும் நாளில் கூட, தனது வேலையே முக்கியம் என உழைத்துக் கொண்டிருக்கும் அந்தத் தாயின் எளிமையும், அதைச் சிறிதும் தயக்கமின்றிப் பெருமையாகக் கூறிய ரமேஷின் குணமும் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. “நிஜமாகவே சாதாரண மக்களிடம் இருந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவரைச் சட்டமன்றத்திற்கு அனுப்பியிருக்கிறார் விஜய்” என நெட்டிசன்கள் தவெக-வின் இந்த அரசியல் மாற்றத்தைக் கொண்டாடி வருகின்றனர். ஒரு சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்து மக்கள் பிரதிநிதியாக மாறியிருக்கும் ரமேஷின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
