இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சஞ்சு சாம்சன், தமிழ்நாட்டின் ஒரு கடற்கரையில் அங்கிருந்த லோக்கல் இளைஞர்களுடன் சாதாரணமாக கிரிக்கெட் விளையாடிய வீடியோ இப்போது இணையத்தில் செம்ம வைரல். எந்த ஒரு பந்தாவும் இல்லாமல், அடையாளம் தெரியாத பசங்களுடன் இணைந்து அவர் ஜாலியாக பேட்டிங் செய்த விதம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
Sanju Samson casually joining a bunch of random guys playing cricket on a beach somewhere in Tamil Nadu… what a guy 😀💛 pic.twitter.com/cEuJ3eloCm
— Sanju Samson Fans Page (@SanjuSamsonFP) May 12, 2026
சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு வீரர், பாதுகாப்பு வளையங்களை எல்லாம் தாண்டி இப்படி மிக எளிமையாக பொதுமக்களுடன் விளையாடுவது ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது. “உண்மையான விளையாட்டு வீரருக்கு இந்த எளிமைதான் அழகு” என நெட்டிசன்கள் சஞ்சு சாம்சனின் இந்த வீடியோவை கொண்டாடி தீர்க்கின்றனர்.
