தமிழகத்தில் தங்கம் விலை இன்று மீண்டும் ஒரு வரலாற்று உச்சத்தைத் தொட்டு, சாமானிய மக்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே ஏறுமுகத்தில் இருந்து வரும் தங்கத்தின் விலை, இன்று (மே 12) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,840 அதிரடியாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு சவரன் ரூ.1,12,800-க்கு விற்பனையான நிலையில், இன்றைய விலை உயர்வால் அது ரூ.1,14,640-ஆக எகிறியுள்ளது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலையும் ரூ.230 உயர்ந்து, ரூ.14,330-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உலகளாவிய பொருளாதாரச் சூழல் மற்றும் போர் பதற்றங்கள் காரணமாகத் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதே இந்தத் திடீர் விலை உயர்வுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. திருமண விசேஷங்கள் நெருங்கும் வேளையில், தங்கம் விலை இப்படி ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவது நடுத்தர வர்க்கத்தினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.