உத்தரபிரதேசத்தில் திருமண விருந்து ஒன்றில் நடந்த வினோதமான மற்றும் அதிர்ச்சிகரமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 100 பேருக்கு மட்டுமே சமைக்கப்பட்ட விருந்துக்கு, எதிர்பாராத விதமாக 200-க்கும் மேற்பட்ட உறவினர்களும் ஊர் மக்களும் திரண்டு வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த மணப்பெண்ணின் தந்தை, உணவு பற்றாக்குறையை சமாளிக்கவும் வந்தவர்களை விரட்டவும் ஒரு விபரீத முடிவை எடுத்தார்.

இந்நிலையில் அவர் ரகசியமாக உணவில் எனப்படும் வயிற்றுப்போக்கை உண்டாக்கும் மருந்தை கலந்துவிட்டார். இந்த உணவை உண்ட சிறிது நேரத்திலேயே திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள், மாப்பிள்ளையின் வீட்டார் மற்றும் தந்தை என அனைவரும் கடும் வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டனர்.

“>

மேலும் ஒருபுறம் திருமணம் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் விருந்தினர்கள் அனைவரும் கழிவறையை தேடியும், திறந்தவெளி வயல்வெளிகளை நோக்கியும் அலறியடித்து ஓடும் காட்சிகள் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தந்தை எடுத்த இந்த விபரீத செயலால் மகிழ்ச்சியாக நடக்க வேண்டிய திருமணம் பெரும் குழப்பத்திலும் தர்மசங்கடத்திலும் முடிந்தது.