தற்காப்புக் கலை மற்றும் திரைத்துறையின் உலகளாவிய அடையாளமாகத் திகழும் ஜாக்கி சான், தற்போது பாரிஸ் நகரில் உள்ள காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. பாரிஸ் சென்றிருந்த ஜாக்கி சானை எதிர்பாராத விதமாகச் சந்தித்த அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள், அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அப்போது ஜாக்கி சானின் எளிமையையும் அன்பான அணுகுமுறையையும் கண்ட அங்கிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர், நெகிழ்ச்சியில் கண்கலங்கிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

​எப்போதும் நேர்மறையான எண்ணங்களுடனும், புன்னகையுடனும் காணப்படும் ஜாக்கி சானுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக, எவ்வித வெறுப்புகளும் இல்லாத (No haters) ஒரு உலகளாவிய நட்சத்திரமாக அவர் அறியப்படுகிறார். பாரிஸில் அவர் காட்டிய இந்த எளிமையான குணம், அவர் ஏன் ஒரு ‘லெஜண்ட்’ என்று அழைக்கப்படுகிறார் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையவாசிகளிடையே அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.