வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சிவசங்கரன் (27) என்ற வாலிபர், கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்த இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார்.

அதிகாலையில் எழுந்து பார்த்தபோது அவரைக் காணாததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் தேடியபோது, அருகில் இருந்த மற்றொரு வீட்டின் கூரையில் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. தகவலறிந்து வந்த போலீசார், சிவசங்கரனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், நீண்ட நாட்களாக கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததே அவர் இந்த முடிவை எடுக்கக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. வாலிபரின் இந்த திடீர் மறைவு அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது