இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரங்களாகத் திகழும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் பெண் புலி ஷஃபாலி வர்மா ஆகியோருக்கு தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை (NADA) அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஊக்கமருந்து சோதனையின் போது தாங்கள் இருக்கும் இடம் குறித்த தகவலை முறையாகத் தெரிவிக்காத (Whereabouts Failure) விவகாரத்தில் இவர்கள் இருவரும் சிக்கியுள்ளனர்.

விதிமுறைப்படி, வீரர்கள் தாங்கள் எங்கே இருக்கிறோம், எப்போது பயிற்சியில் ஈடுபடுகிறோம் என்ற விபரங்களை முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.

ஆனால், டிசம்பர் 17 அன்று ஜெய்ஸ்வாலையும், நவம்பர் 7 அன்று ஷஃபாலியையும் சோதனை செய்ய அதிகாரிகள் சென்றபோது, இருவரும் குறிப்பிட்ட இடத்தில் இல்லை எனக் கூறப்படுகிறது.

இது குறித்து விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீஸுக்கும் உரிய பதில் வரவில்லை என்பதால் தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஒருவேளை 12 மாத காலத்திற்குள் மூன்று முறை இதுபோல விதிமீறலில் ஈடுபட்டால், சம்பந்தப்பட்ட வீரர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

தற்போது இவர்களுக்குத் தற்காப்பு வாதத்தை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும், இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் இந்தச் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.