தமிழக அரசியல் களம் தற்போது ஆட்சியமைப்பு மற்றும் பதவிப் போட்டிகளால் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகை சனம் ஷெட்டி தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“இந்த ஒரு சீட், ரெண்டு சீட் வச்சிருக்கிறவங்க பண்ற அட்ராசிட்டி இருக்கே…” என அவர் பதிவிட, அது நேரடியாக தற்போது ஆதரவு கடிதம் கொடுத்து பேரம் பேசும் கட்சிகளைக் குறிப்பிடுவதாக நெட்டிசன்கள் விவாதிக்கத் தொடங்கினர்.

இதற்குப் பதிலடி கொடுத்த நெட்டிசன் ஒருவர், “அதுவும் மக்கள் தீர்ப்புதான் மேடம், அதைச் சாதாரணமாக நினைக்காதீர்கள்” எனக் கமெண்ட் செய்ய, அதற்கு சனம் ஷெட்டி கொடுத்த பதில்தான் இப்போது வைரல்.

“மக்கள் வாக்களித்தது எம்.எல்.ஏ சீட்டுக்காகத்தானே தவிர, துணை முதல்வர் பதவிக்காக அல்ல” என அதிரடியாகப் பதில் கொடுத்துள்ளார். சனம் ஷெட்டியின் இந்தத் துணிச்சலான கருத்து சமூக வலைதளங்களில் ஆதரவையும் எதிர்ப்பையும் ஒருசேரப் பெற்று வருகிறது.