விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவன் தமிழக முதலமைச்சராக வாய்ப்புள்ளதாக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ள கருத்து, அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வன்னி அரசு, கட்சியின் தற்போதைய நிலைப்பாடு குறித்து விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது, “ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதே எங்களது கட்சியின் அடிப்படை கொள்கை. அந்தக் கொள்கைக்கு செயல்வடிவம் கொடுப்பதற்கான ஒரு நல்வாய்ப்பு தற்போது உருவாகியுள்ளது.

தொடர்ந்து பேசிய அவர், விரைவில் நடைபெறவுள்ள திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திருமாவளவன் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு பதிலளித்தார். இத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தலைவர் திருமாவளவனே இறுதி முடிவை எடுப்பார் என்றும் வன்னி அரசு குறிப்பிட்டார்.
திருமாவளவன் முதல்வர் வேட்பாளர் என்ற ரீதியில் வன்னி அரசு பேசியுள்ள இந்த விவகாரம், தமிழக அரசியல் கூட்டணிகளிடையே புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தமிழக வெற்றிக்கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் ஆதரவால் கிட்டத்தட்ட 11 7 ஆக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியிடம் இரண்டு எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில் இன்று திருமாவளவன் தன்னுடைய முடிவை அறிவிக்க இருக்கிறார். மேலும் தமிழக வெற்றி கழகத்தினர் நடிகர் விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று ஏற்கனவே தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ள நிலையில் தற்போது திருமாவளவன் தமிழகத்தின் முதல்வர் என்று வன்னியரசு கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.