மகாராஷ்டிர மாநிலம் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாகவும், அவர்கள் கட்டாய மதமாற்றத்திற்கு வற்புறுத்தப்பட்டதாகவும் கடந்த பிப்ரவரி மாதம் புகார் எழுந்தது. இதுகுறித்து போலீசார் ரகசிய விசாரணை நடத்தியதில், அந்த அலுவலகத்தின் மனித வள மேலாளராக இருந்த 25 வயது நிதா கான், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவாமல் புகார்களை மறைக்க முயன்றது தெரியவந்தது.
மேலும், இந்து பெண் ஊழியர்களை மூளைச்சலவை செய்து மதமாற்றம் செய்ய முயன்ற விவகாரத்திலும் அவருக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நிதா கானை பணியிடை நீக்கம் செய்தது.
போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்ததைத் தொடர்ந்து, கடந்த 25 நாட்களாகத் தலைமறைவாக இருந்த நிதா கான், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்தச் சம்பவம் நாசிக் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
