சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, இந்தியர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு ரயில் லோகோ பைலட் தனது ரயிலின் எஞ்சின் மீது வரையப்பட்டிருந்த இந்திய தேசியக் கொடியில் படிந்திருந்த தூசியையும் அழுக்கையும் மிகுந்த மரியாதையுடன் தனது கைக்குட்டையால் துடைத்து சுத்தம் செய்கிறார்.
இந்நிலையில் பணியின் இடையில் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி அவர் காட்டிய இந்த செயல், தேசியக் கொடியின் மீதான அவரது ஆழ்ந்த மரியாதையையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இணையவாசிகள் அந்த லோகோ பைலட்டைப் பாராட்டி வருகின்றனர்.
एक लोको पायलट ट्रेन के आगे लगे झंडे को साफ कर रहा है,
यह सिर्फ ड्यूटी नहीं बल्कि सच्ची देशभक्ति का जीता-जागता उदाहरण है 🇮🇳 pic.twitter.com/knQHaZgz78
— Dr. Sheetal yadav (@Sheetal2242) May 6, 2026
“>
இதனால் “இதுதான் உண்மையான தேசபக்தி” என்றும், “எந்தவொரு விளம்பரமும் இன்றி அமைதியாகச் செய்யப்படும் இத்தகைய செயல்களே நாட்டிற்குப் பெருமை சேர்க்கின்றன” என்றும் மக்கள் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர். கடமைக்கு அப்பாற்பட்டு தேசத்தின் அடையாளத்தை ஒரு குடிமகனாக அவர் மதித்த விதம், தற்போது சமூக வலைதளங்களில் பலரது இதயங்களை வென்றுள்ளது.
