திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த பிறகு தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டியளித்த விசிக தலைவர் திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் முட்டுக்கட்டை போடுவதாகக் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். “விஜய், காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெற்றதால் பாஜக ஆத்திரமடைந்துள்ளது. அந்த ஆத்திரத்தால்தான் தற்போது விஜய்க்குத் தேவையில்லாத இடையூறுகளைச் செய்து வருகிறார்கள்” என அவர் பகிரங்கமாகப் போட்டுடைத்துள்ளார்.

​ஆளுநர் தேவையற்ற முறையில் காலம் தாழ்த்துவது சட்டத்திற்குப் புறம்பானது என்றும், பெரும்பான்மையைச் சட்டப்பேரவையில் நிரூபிக்க உத்தரவிட வேண்டியதுதான் ஆளுநரின் கடமை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாஜகவின் இந்த மறைமுக அரசியல் தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ள திருமாவின் இந்தப் பேட்டி, தற்போது அரசியல் வட்டாரங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.