அதிமுக கட்சியில் தேர்தல் முடிந்ததில் இருந்தே உட்கட்சி மோதல்கள் பகிரங்கமாக வெடித்துள்ளது. தேர்தல் முடிவடைந்த நிலையில் கிட்டத்தட்ட 4 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்த நிலையில் சமீபத்தில் முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர் விஜயபாஸ்கர் ஆகியோரும் ராஜினாமா செய்தார். இதன் காரணமாக கிட்டத்தட்ட தமிழகத்தில் 7 சட்டமன்ற தொகுதிகள் காலியான நிலையில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
ஏற்கனவே அதிமுக எம்எல்ஏக்கள் நான்கு பேர் ராஜினாமா செய்த கையோடு தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த நிலையில் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் நாளை தவெகவில் இணைய இருப்பதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து தற்போது முன்னாள் அமைச்சர் மற்றும் கரூர் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ எம் ஆர் விஜயபாஸ்கரும் தற்போது தமிழக வெற்றி கழகத்தில் நாளை இணைந்து தன்னுடைய புதிய அரசியல் பயணத்தை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார். மேலும் இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
