தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ் கட்சி பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளது. அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றும் தவெக-வை ஆட்சி அமைக்க அழைக்காமல் காலந்தாழ்த்தும் ஆளுநரின் செயல் அரசியலமைப்பிற்கு எதிரானது என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுநர்களை வைத்து பாஜக அரசியல் நடத்துவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்றும் அவர் சாடியுள்ளார்.

​ஆளுநரின் இந்தச் செயல் தெளிவான உள்நோக்கம் கொண்டது எனத் தெரிவித்துள்ள அவர், பாஜகவின் தூண்டுதலின் பேரிலேயே இத்தகைய முட்டுக்கட்டைகள் போடப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் நிலவும் இந்த அசாதாரண சூழல் மற்றும் விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் களம் இறங்கியுள்ளது அரசியல் வட்டாரங்களில் காட்டுத்தீயாய் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.