தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் சிக்கலாக உள்ள நிலையில், அதிமுகவிற்கு திமுக ஆதரவு அளிப்பதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என திமுக மூத்த தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். திமுகவும் அதிமுகவும் இணைந்து அரசியல் செய்வது சரியானதல்ல என்றும், அதுபோன்ற எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறி வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மேலும், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கத் தேவையான மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டியது விஜய்யின் பொறுப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து திமுக கூட்டணியிலேயே நீடிக்க வேண்டும் என்பதே தங்களின் விருப்பம் எனத் தெரிவித்த அவரது இந்தப் பேட்டி, தமிழகக் கூட்டணி அரசியலில் புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
