தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி தவெக அதிக இடங்களில் வென்றுள்ள சூழலில், விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் தயக்கம் காட்டுவதற்கு நடிகர் விஷால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “மக்களின் தீர்ப்பிற்கு என்ன மரியாதை இருக்கிறது? நமக்குத் தேவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமே தவிர, ஆளுநர் ஆட்சி அல்ல” என அவர் ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார்.

​விஜய் நிச்சயமாக ஒரு வலுவான அரசாங்கத்தை அமைப்பார் என நம்பிக்கை தெரிவித்துள்ள விஷால், ஒரு வாக்காளனாக அதை உறுதிப்படுத்தத் தான் முன்னிற்பேன் என்றும் உறுதி அளித்துள்ளார். 233 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்க வேண்டிய நிலையில், நிலவும் இந்த அரசியல் இழுபறிக்கு எதிராக விஷால் குரல் கொடுத்துள்ளது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.