கல்கோடியாஸ் பல்கலைக்கழகத்தில் நடந்த கலை விழாவில் அரங்கேறிய ஒரு மேஜிக் ஷோ, தற்போது சமூக வலைதளங்களில் பெரிய அளவில் கிண்டலுக்கும் விவாதத்திற்கும் உள்ளாகியுள்ளது.
மேடையில் ஒரு மாயாஜால நிபுணர் தனது உதவியாளரின் உடையை நொடிப் பொழுதில் மாற்றிக் காட்டும் மேஜிக் செய்தபோது, அது முன்பக்கத்திலிருந்து பார்க்க அழகாகத் தெரிந்தாலும், யாரோ ஒருவர் பக்கவாட்டில் இருந்து எடுத்த வீடியோ மொத்த ரகசியத்தையும் உடைத்துவிட்டது.
அந்த வீடியோவில் உதவியாளர் எப்படி உடையை மாற்றுகிறார் என்பது அப்பட்டமாகத் தெரிந்ததால், அது ஒரு மேஜிக் ஷோ போல இல்லாமல், மேஜிக் எப்படிச் செய்வது என்பதைக் கற்றுக்கொடுக்கும் ஒரு ‘டியூட்டோரியல்’ வீடியோ போல மாறிப் போனது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் இதைக் கலாய்த்து மீம்ஸ்களைப் பதிவிட்டு வருகின்றனர். “இது மேஜிக் அல்ல, மேஜிக் மேக்கிங் வீடியோ” என்றும், “சாலையோர மேஜிக் செய்பவர்கள் கூட இதைவிட ரகசியமாகச் செய்வார்கள்” என்றும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஏற்கனவே இந்தப் பல்கலைக்கழகம் சில சர்ச்சைகளில் சிக்கியிருந்த நிலையில், இந்தத் தோல்வியடைந்த மேஜிக் ஷோ “பல்கலைக்கழகத்தின் தரம் இப்படித்தான் இருக்கிறது” என விமர்சிப்பதற்கான ஒரு வாய்ப்பாகப் பலருக்கு அமைந்துவிட்டது.
THIS IS WHAT “CONSISTENCY” LOOKS LIKE 🔥
After Galgotias’ massive ROBO-dog backlash, students badly needed a break.
So the faculty arranged a magic show for “refreshment”.
And true to Galgotias’ track record…
They didn’t disappoint there either. pic.twitter.com/aHSu4VVV8K
— Mr Sharma (@sharma_views) May 5, 2026
“>
ஒரு பெர்பார்மன்ஸை விட அதை எந்த கோணத்தில் படம்பிடிக்கிறார்கள் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது.
