தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ல் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அசுர வளர்ச்சி கண்டு தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருப்பது ஒட்டுமொத்த தேசத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ள நிலையில், பிரபல தொழிலதிபரும் நடிகருமான ‘லெஜெண்ட்’ சரவணன் தவெக தலைவர் விஜய்க்குத் தனது பாணியில் வாழ்த்துகளை வாரி வழங்கியுள்ளார்.
விஜய்யின் இந்த இமாலய வெற்றி குறித்துப் பேசியுள்ள அவர், “இந்த மாபெரும் வெற்றிக்கு இளைஞர்களின் அசாத்திய எழுச்சிதான் முக்கியக் காரணம்; இந்த எழுச்சியைப் பார்த்து இந்தியாவே மிரண்டு போய்க் கிடக்கிறது” எனப் பூரித்துப் போயுள்ளார். மேலும், தமிழக மக்கள் விஜய்க்கு மிகப்பெரிய பொறுப்பை வழங்கியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இதை விஜய்க்கு பக்கபலமாக இருப்பவர்கள் முழுமையாக உணர்ந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
அன்று நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் போன்றதொரு வரலாறு காணாத மக்கள் எழுச்சிதான் இன்று வாக்குப்பெட்டிகளில் எதிரொலித்திருப்பதாகக் குறிப்பிட்ட லெஜெண்ட் சரவணன், தவெக-வின் இந்த மாஸ் என்ட்ரி இந்திய அரசியலிலேயே ஒரு மிகப் பெரிய திருப்புமுனையையும் மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
