பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபின் மகள் ராபியா இம்ரான் மற்றும் அவரது கணவர் இம்ரான் யூசுஃப் ஆகியோர், பஞ்சாப் சாஃப் பானி நிறுவன ஊழல் வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளனர். பல கோடி ரூபாய் ஊழல் மற்றும் பணமோசடி புகார் காரணமாக 2022-ஆம் ஆண்டு இவர்களுக்கு எதிராகப் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால், இருவரும் இங்கிலாந்துக்குச் சென்றிருந்தனர்.

சமீபத்தில் பாகிஸ்தான் திரும்பிய இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், அவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் ஏதுமில்லை என ஊழல் தடுப்பு அமைப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கில் இருவருக்கும் தொடர்பு இருப்பதற்கான சான்றுகள் இல்லாததால் அவர்களை நிரபராதிகள் என அறிவித்து விடுவித்தது.

முன்னதாக இவர்கள் நாடு திரும்பியபோது மே 7-ஆம் தேதி வரை கைது செய்யத் தடை விதிக்கப்பட்டு முன்ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. தற்போது நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பால், பல ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த ஊழல் வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. இது பிரதமர் குடும்பத்தினருக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.