சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1440 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. இதனால் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,10,560 ரூபாய் க்கும், ஒரு கிராம் 13820 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 15076 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,20,608 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு ஐந்து ரூபாய் வரையில் குறைந்து ஒரு கிராம் 265 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,65,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
