தமிழகத்தில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் திமுக அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் இடையே கடுமையான போட்டிகள் நிலவியது. தற்போது தமிழக வெற்றி கழகம் கிட்டத்தட்ட 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் திமுக மற்றும் அதிமுகவும் குறிப்பிடத்தக்க இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சமீபத்தில் திமுகவில் இணைந்த ஓ பன்னீர்செல்வம் மீண்டும் போடி தொகுதியில் போட்டியிட்டு இருந்தார்.

காலை முதலே ஓபிஎஸ் அந்த தொகுதியில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்த நிலையில் திடீரென களம் மாறி முன்னிலைக்கு வந்து தற்போது வெற்றி வாகை சூடினார். மேலும் தேனி போடிநாயக்கனூர் தொகுதியில் பன்னீர்செல்வம் மீண்டும் வெற்றி வாகை சூடியதை தற்போது அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.