தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம்  சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8:00 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 23ஆம்தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதேபோன்று அசாம், மேற்குவங்கம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று மொத்தமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல் தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகம் பல தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது.

இந்த நிலையில் தற்போது தமிழக வெற்றிக்கழகத்தின் வேட்பாளர்கள் அடுத்தடுத்து வெற்றி வாகை சூடி வருகிறார்கள். அதே நேரத்தில் அதிமுக மற்றும் திமுக ஆகிய திராவிட கட்சிகளும் பல இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. இந்த நிலையில் பாளையங்கோட்டை தொகுதியில் திமுக கட்சியின் வேட்பாளர் அப்துல் வகாப் வெற்றிவாகை சூடியுள்ளார்