ஆதார் அட்டையில் பெரிய மாற்றங்கள் வரப்போவதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானது என்று மத்திய அரசு அதிரடி விளக்கம் அளித்துள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் ஆதார் அட்டையில் முகவரி உள்ளிட்ட விவரங்கள் நீக்கப்பட்டு, வெறும் புகைப்படம் மற்றும் கியூஆர் (QR) கோடு மட்டுமே இருக்கும் வகையில் புதிய கார்டுகள் அறிமுகம் செய்யப்படும் என்று வதந்திகள் பரவின.
இதனை மறுத்துள்ள அரசு, பொதுமக்கள் இதுபோன்ற போலிச் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
