ஆதார் அட்டையின் தோற்றம் இந்த ஆண்டின் இறுதிக்குள் மாறப்போவதாகவும், இனி அதில் புகைப்படம் மற்றும் QR குறியீடு மட்டுமே இருக்கும் என்றும் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு மத்திய அரசு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இத்தகைய செய்திகள் முற்றிலும் உண்மையானவை அல்ல என்றும், ஆதார் அட்டையில் இது போன்ற எந்த மாற்றங்களையும் செய்யும் திட்டம் தற்போது அரசிடம் இல்லை என்றும் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இது போன்ற தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் சமூக வலைதளப் பதிவுகளையும், செய்திகளையும் பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆதார் தொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலுக்கும் UIDAI-ன் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது செய்திக்குறிப்புகளை மட்டுமே மக்கள் நம்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
