புனே மாவட்டத்தில் நான்கு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மகாராஷ்டிரா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறைக்காகப் பாட்டி வீட்டிற்கு வந்திருந்த அந்தச் சிறுமியை, 65 வயதான பீம்ராவ் காம்ப்ளே என்ற தொழிலாளி கன்றுக்குட்டியைக் காட்டுவதாக ஆசை காட்டி மாட்டுக்கொட்டகைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து, கல்லால் அடித்துக் கொலை செய்ததோடு, உடலை மாட்டுச் சாணக் குவியலுக்கு அடியில் மறைத்து வைத்தது விசாரணையில் தெரியவந்தது. சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் குற்றவாளியைக் கைது செய்த காவல்துறை, அவரை மே 7-ஆம் தேதி வரை காவலில் எடுத்துள்ளது.
<a href="http://

“>

இந்தக் கொடூரச் செயலால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்கக் கோரி புனே-பெங்களூரு நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களைக் கலைக்க காவல்துறை லேசான தடியடி நடத்திய நிலையில், அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட சிறுமியின் உடல் பலத்த பாதுகாப்புடன் புனேவில் உள்ள வைகுந்த் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. ஏற்கனவே குற்றப் பின்னணி கொண்ட பீம்ராவ் காம்ப்ளே மீது 1998 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளில் வழக்குகள் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது