இந்திய கிரிக்கெட் அணியில் குறைந்த ஸ்டிரைக் ரேட் காரணமாக கடந்த 2022-ம் ஆண்டிலிருந்து ஓரங்கட்டப்பட்ட கே.எல். ராகுல், தற்போது ஐபிஎல் 2026 தொடரில் ருத்ரதாண்டவம் ஆடி தேர்வாளர்களுக்கு மரண மாஸ் பதிலடி கொடுத்துள்ளார்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர், 54 சராசரி மற்றும் 180-க்கும் மேற்பட்ட அதிரடி ஸ்டிரைக் ரேட்டுடன் ரன் மழையைப் பொழிந்து, நடப்பு சீசனின் ‘ஆரஞ்சு தொப்பியை’ (Orange Cap) தட்டிச் சென்றுள்ளார். குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற ராகுல், தனது பேட்டிங் ஸ்டைலை நவீன டி20 கிரிக்கெட்டுக்கு ஏற்ப மொத்தமாக மாற்றிவிட்டதை நிரூபித்துள்ளார்.
ஆரஞ்சு தொப்பியைப் பெற்றுக்கொண்ட பின் பேசிய ராகுல், “கடந்த சில ஆண்டுகளாக எனது ஸ்டிரைக் ரேட் பற்றித்தான் பெரிய விவாதமே நடந்தது, இப்போது அதற்குப் பதில் சொல்லும் வகையில் கடுமையாக உழைத்து ரன் சேர்த்துள்ளேன்” என அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழுவிற்குச் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
புள்ளிவிவரங்களை விட அணியின் வெற்றியே முக்கியம் எனக் குறிப்பிட்டாலும், தேர்வாளர்கள் எதிர்பார்த்த அதே ‘வேகமான’ ஆட்டத்தை தான் வெளிப்படுத்தியுள்ளதால், மீண்டும் இந்திய டி20 அணிக்குள் நுழையத் தான் தயார் என்பதை ராகுல் இந்த சீசன் மூலம் உரக்கச் சொல்லியுள்ளார். இவரின் இந்த அசுர வேக ஃபார்ம், மற்ற சீனியர் வீரர்களுக்கும் இந்திய அணியில் இடம்பிடிக்கப் போராடும் இளம் வீரர்களுக்கும் பெரும் சவாலாக மாறியுள்ளது.
