ஐபிஎல் 2026 தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான மோதலில், 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு டெல்லி வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் அளித்த ஆக்ரோஷமான வழியனுப்பல் (Send-off) இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
போட்டியின் தொடக்கத்திலேயே ஜேமிசன் வீசிய துல்லியமான யார்க்கர் பந்தில் சூர்யவன்ஷி ஆட்டமிழக்க, விக்கெட்டை வீழ்த்திய உற்சாகத்தில் ஜேமிசன் அந்தச் சிறுவனுக்கு மிக அருகில் சென்று கைகளைத் தட்டி ஆக்ரோஷமாகச் சைகை காட்டினார். ஒரு உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர், தனது பாதியளவு வயதேயான ஒரு சிறுவனிடம் காட்டிய இந்த முதிர்ச்சியற்ற நடத்தை ரசிகர்களைக் கொதிப்படையச் செய்துள்ளது.
The celebration of Kyle Jamieson after dismissing Vaibhav Suryavanshi. pic.twitter.com/s6Otq9Uu0X
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 1, 2026
“>
“அமைதியாக இருங்கள் ஜேமிசன், அவருக்கு இன்னும் 15 வயதுதான்” என்றும், “இவ்வளவு பெரிய வீரருக்கு இத்தனை பலவீனமான அகங்காரமா?” என்றும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் அனல் பறக்கின்றன.
Calm down Jamieson, he is just 15 y/o 😭🙏🏻 pic.twitter.com/RtvBMwBYXS
— Shivani (@meme_ki_diwani) May 1, 2026
“>
